ஒக்ரோபர் 16, 2006

சுட்ட கவிதையா?

Posted in nahaichchuvai, sooham இல் 9:00 முப by CAPitalZ

சுட்டேன் உன்னை
என் மனதுக்குள் – என்னை
விட்டுப் பிரியாதே என்னும்
ஆத்திரத்தில்

சுடுவேனா…
உனக்காக
நான் வருந்தி எழுதியதை?

 

 

பெண்: எங்கே இந்தக் கவிதைகளைச் சுட்டாய்?

Advertisements

ஒக்ரோபர் 15, 2006

என்ன பாவம்

Posted in sooham இல் 9:00 முப by CAPitalZ

என்ன பாவம் செய்தனோ
உன்னை சந்திப்பதற்கு
சேரமுடியாமல் பிரிவதற்கா – நான்
என்ன பாவம் செய்தனோ

தெரிந்திருந்தும்
தெரியாமல் கேட்கிறாயே
என்னைப் பிரிவதற்கா – நான்
என்ன பாவம் செய்தனோ

பெண்ணில் பிடித்த எல்லாம்
உன்னில் இருக்க
உன்னை விட்டுப் பிரிவதற்கா – நான்
என்ன பாவம் செய்தனோ

செய்த தானம்
போதாதென்பதால்
நம்மை வருத்திப் பிரிவதற்கா – நான்
என்ன பாவம் செய்தனோ

எல்லாப் பாவமும்
கூட்டுச் சேர்ந்து நாம்
இணையாமல் பிரிவதற்கா – நான்
என்ன பாவம் செய்தனோ

செவ்வாய் கெடுக்கிறான்
சாதகத்தில் வந்து
பொருந்தாமல் பிரிவதற்கா – நான்
என்ன பாவம் செய்தனோ

சனியன் தண்டனை கொடுக்கிறான்
குடும்பத்தில் பிரச்சனை செய்து
பிடிக்காமல் பிரிவதற்கா – நான்
என்ன பாவம் செய்தனோ

11/09/2005

ஒக்ரோபர் 14, 2006

புதிய காதலி

Posted in sooham இல் 9:00 முப by CAPitalZ

புதிய காதலி

 

 

 

நான் எழுதிய அர்த்தம் வேறு. எனது நண்பன் கூறிய பதில் வேறு.

“ஆமாம்.
எனது புதிய காதலி தான்.
“நீ” ஒவ்வொரு நாளும் எனக்கு புதிய காதலி தான்!”

ஒக்ரோபர் 13, 2006

Lose Myself

Posted in English Poems, nanRanRu இல் 9:00 முப by CAPitalZ

As everyday passes,
I lose myself
Onto yours. Why
I do not know.

Just I know one thing
Could not put myself
into a time, without
Thinking of you

 

 

26/10/2002

ஒக்ரோபர் 12, 2006

ஏன் பிரிவு

Posted in kaathal இல் 9:00 முப by CAPitalZ

பெண்ணே..
பிரிகிறேன் என்று எண்ணாதே
கனவில் வர
இப்போ உறங்கச் செல்கிறேன்

 

 

31/12/1996

முன்னைய பக்கம் · அடுத்த பக்கம்