செப்ரெம்பர் 15, 2006

புரட்சிக் காதலன்

Posted in nanRanRu இல் 9:00 முப by CAPitalZ

மணந்தால் நீ
இல்லையேல் மரணம் – என்று
கூறமாட்டேன் – அது
இயலாதவன் கூற்று

மணந்தால் நீ
இல்லையேல் மனதில் நீ – என்று
கூறமாட்டேன் – அது
நம்பிக்கை இல்லாதவன் கூற்று

மணந்தால் நீ
இல்லையேல் மற்றொருத்தி – என்று
கூறமாட்டேன் – அது
மோசடிக்காரன் கூற்று

 

இக் கவிதைக்கு முடிவை இன்னும் எழுதவில்லை. உங்களுக்கு சுவாரசியமான / திருப்புமுனையான / வித்தியாசமான முடிவு தோன்றினால், பின்னூட்டமாக இடவும்.

Advertisements

7 பின்னூட்டங்கள் »

 1. CAPitalZ said,

  ஒரு நண்பி எழுதி அனுப்பிய முடிவு:

  மணந்தால் நீ இல்லையெல் – மலரே
  நீ எந்நாளும் மணம் வீச
  போராடுவேன் – ஏனெனில்
  நான் உன் காதலன்

  ஆனாலும்
  மணந்தாலும் நீ மணக்காவிட்டாலும்
  காதலித்துகொண்டே இருப்பேன்
  உன்னையல்ல, என்னை – என்னில் உள்ள உன்னை
  ஏனெனில் நான் ஒரு புரட்சிக் காதலன்.

 2. CAPitalZ said,

  இன்னொரு நண்பி எழுதி அனுப்பிய முடிவு:

  மணந்தால் நீ
  இல்லையேல் போராடுவேன் – என்று
  கூறமாட்டேன – அதை
  செயலில் காட்டுவேன்

 3. ாா said,

  நீங்கள் எழுதியவைதான் மோசம் என்றால் இவர்கள் அதை விட மோசம்.

 4. CAPitalZ said,

  நன்றி உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்.

 5. //
  முந்தைய பதிவு ஏன் உங்கள் கவிதையினை மோசம் என்பது மட்டும் விளங்கவில்லை!!
  //

  எனினும்…எனது எண்ணங்கள்!!

  இக்காதலனை சில கதாபாத்திரங்களில் கற்பனை செய்த போது தோன்றியவை…

  காதலனாய்..

  மணந்தால் நீ – இல்லவிட்டாலும்;
  காதலின் முடிவுரை – திருமணம்
  மட்டுமல்ல என்பதை மட்டும்
  மனதில் கொள்!!

  கவிஞனாய்..

  மணந்தால் நீ – எனை
  மணந்தால் நாம் – எனை
  மறுத்தால் நீயாக
  நான் நானாக!!

  யதார்த்தமாய்..

  மணந்தால் நீ
  மறுத்தால் நீ
  காலத்துடன் நான்
  காதலுடன் நான்

 6. CAPitalZ said,

  ஐயா, முதலில் உங்கள் வ்ருகைக்கும், கருத்திற்கும் நன்றிகள் பல.

  உங்கள் ஒவ்வொரு கோணத்தின் பார்வைகளும் அற்புதமாய் இருக்கின்றது. கவிஞனாய் வடித்துள்ளது என்னைக் கவன்றுள்ளது.

  _______
  CAPital

 7. saran said,

  (thiru)manam onruthan kathalin thirva nanpa


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: