09.30.06
ஊடல்
காமம் என்னும் தாளில்
காதல் என்னும் எழுதுகோல் பிடித்து
உடல்கள் எழுதும் கவிதை!
10/09/2004
09.28.06
உணர்தல்
போகப் போக அவளை அறிந்து கொண்டேன்
பாவி என்று எனை நொந்து கொண்டேன்
அவளுக்கும் மனம் இருப்பதைத் தெரிந்து கொண்டேன்
கெட்டவள் அல்ல எனப் புரிந்து கொண்டேன் – இம்
மாற்றத்தில் நான் எனை இழந்து கொண்டேன்
இதனால் நான் காதல் கொண்டேன்.
நல்லவனாக மாறும் கணவன்.
09.26.06
உன் நித்திரை
உன் நித்திரையைக் களவெடுத்து – என்
கண்ணுக்குள் வைத்துக்கொண்டேன்
உன் இதயம் என்னிடத்தில்
நிம்மதியாக உறங்கட்டும் என்று.